உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிப்பர் லாரி மோதி 10 செம்மறி ஆடுகள் பலி

டிப்பர் லாரி மோதி 10 செம்மறி ஆடுகள் பலி

செய்யூர்: தட்டாம்பட்டு கிராமத்தில், அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி மோதியதில், சாலையில் சென்ற 10 செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி உயிரிழந்தன. பவுஞ்சூர் அடுத்த பெருமாள்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி, 40; செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் தான் பராமரித்து வரும் 25 செம்மறி ஆடுகளை, நேற்று காலை, 11:00 மணியளவில், வழக்கம் போல மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் சென்ற போது, கூவத்துாரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி, ஆடுகள் மீது மோதியது. இதில், 10 செம்மறி ஆடுகள், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன; ஐந்து ஆடுகள் காயமடைந்தன. இதையடுத்து, அங்கு திரண்ட கிராம மக்கள், சாலையில் சென்ற அனைத்து லாரிகளையும் மறித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார், கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். சம்பவம் குறித்து, லாரி ஓட்டுநரான திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் குமார், 36, என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ