திருப்போரூர் ஒன்றியத்தில் 12 ஏரிகள் நிரம்பின
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் பருவ மழை காரணமாக, ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 63 ஏரிகள் உள்ளன. இதில், கொண்டங்கி ஏரி, தையூர், மானாமதி, காயார், சிறுதாவூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள், பெரிய ஏரிகளாக உள்ளன. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக தையூர் ஏரி, மானாமதி ஏரி உள்ளிட்ட 12 ஏரிகள், 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளன. மற்ற 12 ஏரிகள், 75 சதவீதமும், 32 ஏரிகள் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதம் அளவிற்கும் நிரம்பி உள்ளன. முன்னதாக, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்போரூர் செக்கடித்தாங்கல் ஏரி, ஆமூர் ஏரி, மானாமதி ஏரி, கழிப்பட்டூர், நாவலுார் உள்ளிட்ட பகுதி ஏரிகளில், உபரி நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.