| ADDED : மார் 15, 2024 09:21 PM
செங்கல்பட்டு:கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து, கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பேருந்து ஜி.எஸ்.டி., சாலையில், சென்று கொண்டிருந்தது.செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகில் சென்ற போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து துாத்துக்குடிக்கு மின் விசிறி உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற சரக்கு லாரி மீது, அரசு விரைவு பேருந்து மோதியது.அந்த விபத்தில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில், பேருந்து ஓட்டுனர் உட்பட 12 பயணியர் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், காயமடைந்த பயணியரை பாதுகாப்பாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, லாரி ஓட்டுனர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கரம்தேவ்குமார் ரவி மற்றும் அரசு பேருந்து ஓட்டனரிடம் விசாரித்து வருகின்றனர்.