இரட்டை பதிவு உள்ள 2.39 லட்சம் வாக்காளர்களுக்கு...நோட்டீஸ்!: தாலுகா அலுவலகங்களுக்கு விளக்கமளிக்க அறிவுரை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகள் இருப்பதாக கூறி, 2.39 லட்சம் வாக்காளர்களுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய, டிச., 24 வரை வாய்ப்பு வழங்கப்ப்ட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், அங்கீகாரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், கடந்த அக்., 29ம் தேதி வெளியிட்டார்.அந்த வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 34 ஆயிரத்து 282 ஆண்கள், 13 லட்சத்து 62 ஆயிரத்து 038 பெண்கள். 478 மூன்றாம் பாலினத்தவர் என, 26 லட்சத்து 96 ஆயிரத்து 798 வாக்களாளர்கள் உள்ளனர்.ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள், வருகிற 16, 17, மற்றும் 23, 24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.பெயர் சேர்த்தல் படிவம் 6, இடமாற்றம் படிவம் 7, தொகுதி மாற்றம் மற்றும் அடையாள அட்டை நகல் படிவம் 8 ஆகியவற்றை பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும்.மனுக்கள் மீது இறுதி முடிவெடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, மாவட்ட தேர்தல் அலுவலக தொலைபேசி எண் 044 - 2954 1715 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இதைத் தொடர்ந்து, ஏழு சட்டபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கம் செய்யக்கூறி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்., மாதம் உத்தரவிட்டது.வாக்காளரின் பெயர், தந்தை பெயர், வயது, பாலினம் போன்றவை விபரங்களில், ஏதாவது இரண்டு விபரங்கள் ஒன்றாக இருந்தாலே, அவற்றை இரட்டை பதிவாக இருக்கக்கூடும் என, தேர்தல் கமிஷனின் கணினி சாப்ட்வேர் அடையாளப்படுத்துகிறது.அவ்வாறு, தேர்தல் கமிஷனின் சாப்ட்வேர் அடையாளம் காட்டக்கூடிய இரு வேறு வாக்காளர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.ஒரே பெயர், ஒரே தந்தை பெயர் உடைய இரு வேறு வாக்காளராக இருந்தாலும், அவர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்புகிறது. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு உள்ளோருக்கு, பெயர் நீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்ப, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் உத்தரவிட்டார்.இதில், ஏழு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 713 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியில், வாக்குப்பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இப்பணியை, கடந்த அக்., மாதம் துவங்கி, 1 லட்சத்து 53 ஆயிரத்து 448 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பும் பணியில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நோட்டீஸ் கிடைத்தவுடன், 15 நாட்களுக்குள் அந்தந்த தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களை, வாக்காளர்கள் நேரில் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என்றால், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு, இரட்டை பதிவை கண்டறிந்து, வாக்குப்பதிவு அலுவலருக்கு அனுப்பிவைப்பர்.அதன்பின், வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர்கள் நீக்கம் செய்யப்படும். இப்பணியை, வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலில்இரட்டை பதிவு விபரம்
தொகுதி வாக்காளர்கள்சோழிங்கநல்லுார் 64,104பல்லாவரம் 35,127தாம்பரம் 31,263செங்கல்பட்டு 37,159திருப்போரூர் 28,068செய்யூர் - தனி 21,385மதுராந்தகம் - தனி 22,607மொத்தம் 2,39,713
மொத்த வாக்காளர் விபரம்
தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம் ஓட்டுச்சாவடிசோழிங்கநல்லுார் 3,38,582 3,38315 125 6,77022 653பல்லாவரம் 2,15,510 2,18,278 46 4,33,834 442தாம்பரம் 2,00,173 2,03,428 69 4,03,670 427செங்கல்பட்டு 2,09,632 2,17,501 65 4,27,198 446திருப்போரூர் 1,50,316 1,55,784 57 3,06,157 321செய்யூர் - தனி 1,09,542 1,13,369 25 2,22,936 263மதுராந்தகம் - தனி 1,10,527 1,15,363 91 2,25,981 274மொத்தம் 13,34,282 13,62,308 478 26,96,798 2,826