உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு

மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு

செங்கல்பட்டு:சென்னை, துரைப்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். தனது வீட்டில் தனியாக கட்டிய கடைக்கு மின் இணைப்பு வழங்க, துரைப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளர் பச்சையப்பனிடம், 2012, ஜன., 19ல் விண்ணப்பித்தார்.இந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட பச்சையப்பன், மின் இணைப்பு வழங்க, மணிகண்டனிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அப்போது, குடும்ப கஷ்டங்களை கூறி, 2,500 ரூபாய் கொடுப்பதாக மணிகண்டன் கூறியுள்ளார்.ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை, மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளர் பச்சையப்பனிடம், 2,500 ரூபாயை மணிகண்டன் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் மடக்கிப்பிடித்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதன்பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்த வழக்கு, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணி, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது.அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார். விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மின் வாரிய உதவி பொறியாளர் பச்சையப்பன், 51, என்பவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை