உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள்கோவில் அருகே வீட்டில் 27 சவரன் கொள்ளை

சிங்கபெருமாள்கோவில் அருகே வீட்டில் 27 சவரன் கொள்ளை

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, 27 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.-சிங்கபெருமாள் கோவில் அடுத்த வி.ஐ.பி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாவீர், 50; மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியில், அடகுக்கடை நடத்தி வருகிறார்.இவர், தன் குடும்பத்துடன் கடந்த 18ம் தேதி, குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார்.நேற்று காலை மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 27 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து மகாவீர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார், தடயவியல் நிபுணர்களை அழைத்து தடயங்களை சேகரித்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, முருகையன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் திருடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது, இந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை