உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில சதுரங்க போட்டி 276 பேர் பங்கேற்பு

மாநில சதுரங்க போட்டி 276 பேர் பங்கேற்பு

சென்னை, வண்டலுாரில் நடந்த மாநில செஸ் போட்டியில், 276 பேர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் பி.எஸ்., அப்துல் ரஹ்மான் கிரசன்ட் பல்கலை, ஜி.டி., செஸ் அகாடமி சார்பில், மாநில செஸ் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 276 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றும், 40 நிமிடங்கள் என, 'ராபிட்' அடிப்படையில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, 8, 12, 16 வயதுக்கு உட்பட்டோரில் முதல் 10 பேருக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலை புரோ துணை வேந்தர் தாஜூதீன் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில், உடற்கல்வி துறை இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !