உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடமாநில பெண் கடத்தல் விவகாரம் 3 தனிப்படை அமைத்து விசாரணை

வடமாநில பெண் கடத்தல் விவகாரம் 3 தனிப்படை அமைத்து விசாரணை

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, பிப்., 3ம் தேதி இரவு, வட மாநில பெண்ணை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தினர். பயந்துபோன அப்பெண், கடத்தப்பட்டது குறித்து, தோழியின் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.அதைப்பார்த்து அந்த தோழியின் கணவர், 'லைவ் லொகேஷன்' அனுப்புமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.பின் அப்பெண், அந்த நபரின் மொபைல் போனுக்கு லொகேஷன் அனுப்பியுள்ளார். பின், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இரவு பணியில் இருந்த பல்லாவரம் உதவி கமிஷனர் வெங்கட்குமார் மற்றும் போலீசார், அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர்.போலீசார் பின்தொடர்வதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் மதுரவாயல், மாதாகோவில் தெருவில், அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றனர்.போலீசார் அப்பெண்ணை மீட்டு, வண்டலுார் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து, மூன்று தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.அதே நேரத்தில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், விளக்கு வெளிச்சத்தில் ஆட்டோ எண் சரியாக பதிவாகாததால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ