உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு திருவிடந்தையில் 3.25 ஏக்கர் இடம் தேர்வு

பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு திருவிடந்தையில் 3.25 ஏக்கர் இடம் தேர்வு

மாமல்லபுரம்:வடநெம்மேலியில், தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு, சொந்த கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், தமிழக தொழில் மற்றும் வணிக துறையின்கீழ், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 1978 முதல் இயங்குகிறது. இதில், இருளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளை, அவர்கள் வனப்பகுதியிலிருந்து பிடித்து, சங்கத்தில் ஒப்படைப்பர். பாம்பின் வகைக்கேற்ப, அதை பிடித்தவருக்கு தொகை அளிக்கப்படும்.பாம்பிலிருந்து விஷம் பிரித்து எடுத்து, பாம்புக்கடி விஷமுறிவு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்கப்படும். கடந்த மூன்றாண்டுகளில், 1,807 கிராம் விஷம் எடுத்து, 5.43 கோடி ரூபாய்க்கு விற்று, 2.37 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. மேலும், சுற்றுலா பயணியர், கட்டணம் செலுத்தி பாம்பு பண்ணையை பார்வையிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.இத்தகைய சங்கம், 50 சென்ட் பரப்பில், தனியார் இடத்தில் இயங்குகிறது. சங்க வளாகத்திற்கு குறைந்தபட்சம் மூன்று ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், மிக குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. சங்க செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால், சங்கத்திற்காக சொந்த இடம் கேட்டு, சங்க நிர்வாகத்தினர் அரசிடம் வலியுறுத்தினர்.பாம்பு பண்ணை சுற்றுலா கருதி, வடநெம்மேலி அருகில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், வேறு இடம் தேர்வு செய்ய, அரசு முடிவெடுத்தது.திருவிடந்தை ஊராட்சி, தெற்குப்பட்டு பகுதியில் தேர்வுசெய்ய முடிவெடுக்கப்பட்ட நிலையில், பாம்பு அச்சம் காரணமாக, அங்கு அமைப்பதை அப்பகுதிவாசிகள் எதிர்த்தனர்.இந்நிலையில், தெற்குப்பட்டு பகுதி, கிழக்கு கடற்கரை சாலை அருகில், புல எண் 114/3ல் உள்ள, 3.25 ஏக்கர் அனாதீன நிலம், தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைக்கு சொந்தமானதாக அறிவித்து, அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது.இத்துறையின்கீழ், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கும் நிலையில், இவ்விடம் சங்கத்திற்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை