புதிய குடும்ப அட்டை கேட்டு செங்கையில் 3,888 பேர் விண்ணப்பம்
செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய குடும்ப அட்டை கேட்டு, 3,888 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அதை சரிபார்க்கும் பணியில் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு வழங்கும் உதவித்தொகைகள், பேரிடர் கால நிவாரணம் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சேர்க்கை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த வகையில் மாவட்டத்தில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, ஆகஸ்ட் மாதம் வரை, புதிய ரேஷன் கார்டு கேட்டு, 3,888 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவையடுத்து, புதிய விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில், வட்ட வழங்கல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சரிபார்க்கும் பணி முடிந்தவுடன், புதிய கார்டுகள் வழங்கும் பணி நடைபெறும் என, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாலுகா புதிய விண்ணப்பம்
செங்கல்பட்டு 841மதுராந்தகம் 536செய்யூர் 514திருக்கழுக்குன்றம் 393திருப்போரூர் 521வண்டலுார் 1,083மொத்தம் 3,888