உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

கூவத்துார்:பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 42; காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.கடந்த மாதம் 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு மோகன்ராஜ் பெட்ரோல் பங்கை மூடி விட்டு, தன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது காத்தான்கடை அருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து கூவத்துார் போலீசார் வழக்குப் பதிந்து இரு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், கூவத்துார் நாவக்கால் பகுதியை சேர்ந்த ரகு, 32, அவரது நண்பர்களான தட்சணாமூர்த்தி, 26, ரவீந்திரன், 27, கதிர்வேல், 27 ஆகிய நான்கு பேரை 2ம் தேதி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக இருந்த நான்கு பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கூவத்துார் பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ், 26, ராகுல், 26, தமிழ், 24 மணி 24 ஆகிய நான்கு பேரை கூவத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி