உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைதீர்வு கூட்டத்தில் 425 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 425 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 425 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது.இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, குறைந்த மற்றும் அதிக மின்னழுத்த குறைபாடு, சாலை, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் தராதது, அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 425 மனுக்கள் வரப்பெற்றன. 'இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள பொதுமக்கள் மனுக்கள் குறித்து விசாரணை செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க, அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை