தாம்பரத்தில் 461 நாய்களுக்கு கருத்தடை
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், தெருக்களில் சுற்றித் திரியும், தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, இந்திய விலங்குகள் நலவாரியம் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.அந்த வகையில், பிப்., 1 முதல் மார்ச் 13 வரை, 465 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில், 461 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்து, ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின், பிடித்த இடத்திலேயே நாய்கள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.