பொது போதை ஆசாமி ஓட்டிய கார் மோதியதில் 5 பேர் காயம்
பள்ளிக்கரணை:சென்னை பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் சாலையோரம் சூப் கடை, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இக்கடைகளில் நேற்று முன்தினம் இரவு, வாடிக்கையாளர்கள் சிலர் நின்றிருந்தனர்.அப்போது, அதிவேகமாக வந்த 'மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர்' கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீதும், வாகனங்களின் மீதும் மோதியது.இதில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா, 28, அருண்குமார், 24, சண்முகபிரியா, 12, தனம், 32, சவுசியா, 22, ஆகிய ஐந்து பேர் காயமடைந்தனர்.இவர்களை, பெரும்பாக்கம் போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வடபழனியைச் சேர்ந்த பால மாயக்கண்ணன், 36, என்பவரை பிடித்து விசாரித்தனர்.அவர் போதையில் இருந்தது தெரிந்தது. அவரை பிடித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.