உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் 51 அடி கொடிமரம் பிரதிஷ்டை

ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் 51 அடி கொடிமரம் பிரதிஷ்டை

செங்கல்பட்டு, ஆத்துார் தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில், 51 அடி கொடிமரம், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல ஆண்டுகளாக கொடி மரம் இல்லாமல் இருந்தது.கோவில் வளாகத்தில் கொடி மரம் அமைக்க, முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முக்தீஸ்வரர் கோவிலில், 51 அடி கொடிமரம், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கனகராஜ், அரசு வழக்கறிஞர் திருமுருகன் மற்றும் முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், கிராமவாசிகள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ