உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 57 ஏரிகள் நிரம்பின

செங்கையில் 57 ஏரிகள் நிரம்பின

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஏரிகள் 57 முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள் மற்றும் 2,512 குளங்கள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இதில், ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து ஏரிகளும், 17 குளங்களும் முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !