உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விதிமீறலில் ஈடுபட்ட 396 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

சாலை விதிமீறலில் ஈடுபட்ட 396 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலை விதிமீறலில் ஈடுபட்ட, 396 வாகன ஓட்டுநர் உரிமங்கள், மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அதிக பாரம் ஏற்றிச்சென்றது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது என, பல்வேறு வாகனங்களின் ஓட்டுநர்கள், சாலை விதிகளை மீறியுள்ளனர்.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளின் போலீசார், மார்ச் முதல் மே மாதம் வரை, 396 ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவுக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பின், மார்ச் மாதம் 118 ஓட்டுநர் உரிமம், ஏப்ரலில் 157, மே மாதத்தில் 121 என, 396 ஓட்டுநர் உரிமங்களை, மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ