உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காளியம்மன் கோவில் திருவிழாவில் 3 மூதாட்டிகளிடம் 9 சவரன் ஆட்டை

காளியம்மன் கோவில் திருவிழாவில் 3 மூதாட்டிகளிடம் 9 சவரன் ஆட்டை

சூணாம்பேடு,:தேன்பாக்கத்தில், காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்த மூன்று மூதாட்டிகளிடம், தலா 3 சவரன் என, 9 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சூணாம்பேடு அடுத்த தோட்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா 67. இவர் நேற்று, தேன்பாக்கம் கிராமத்தில் நடந்த பத்ரகாளியம்மன் கோவில் ஆடி திருவிழாவிற்கு, குடும்பத்தினருடன் சென்றார். சுவாமி தரிசனம் செய்து விட்டு, மதியம் 2:00 மணியளவில், கூட்ட நெரிசலில் சென்று அன்னதானம் வாங்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலி காணாமல் போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்து அவர், இதுகுறித்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் தெரிவித்தார் . இதேபோல், அன்னதானம் பெற நெரிசலில் சிக்கிய கடப்பாக்கம் அடுத்த நல்லுார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 63, என்பவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலி, மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ரேணுகா, 65, என்பவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலி காணாமல் போனதும் தெரிந்தது. இதுகுறித்து மூவரும், சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை