உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெடால் ஏரியில் பழுதான மதகு வீணாக வெளியேறும் தண்ணீர்

வெடால் ஏரியில் பழுதான மதகு வீணாக வெளியேறும் தண்ணீர்

செய்யூர்:வெடால் ஏரியில் பழுதான மதகுகளால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி மற்றும் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.இரண்டு ஏரிகளும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.ஏரி நீர் மூலமாக 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரி மதகுகள் வாயிலாக கால்வாய்களுக்கு செல்கின்றன.இங்குள்ள இரண்டு ஏரி மதகுகளும் பராமரிப்பு இன்றி சேதமடைந்து உள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியில் போதைய தண்ணீர் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெடால் பகுதியில் இரண்டு போகம் நெல் பயிரிடப்பட்டு வந்தது.இரண்டு ஏரி மதகுகளும் சேதமடைந்து உள்ளதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அடுத்த பருவத்திற்கு தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஆகையால் தற்போது ஒருபோகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.விவசாயம் செய்ய பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், சேதமடைந்துள்ள ஏரி மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை