திருநங்கையை வெட்டிய மர்ம நபர்களுக்கு வலை
திருப்போரூர்:வண்டலுார் அடுத்த கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர், 26 வயதுடைய திருநங்கை. இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், திருப்போரூர் - கேளம்பாக்கம் சாலை இடையே, செங்கண்மால் பகுதி டீ கடை அருகே இருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், மதுபோதையில் திருநங்கையை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால், திருநங்கைக்கும் மர்ம நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மர்ம நபர், தான் கையில் வைத்திருந்த கத்தியால் திருநங்கையின் இடது கையில் வெட்டியுள்ளார். பின், அனைவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். உடனே, அங்கிருந்த சக திருநங்கையர் அவரை மீட்டு, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு 3 தையல் போடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.