உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குழந்தை வளர்ச்சி திட்ட ஆபீசில் ஆதார் சேவை மையம் துவக்கம்

குழந்தை வளர்ச்சி திட்ட ஆபீசில் ஆதார் சேவை மையம் துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், புதிய ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டு உள்ளது. திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. இங்கு, புதிய ஆதார் அட்டை பதிவு, முகவரி, பெயர் மாற்றம் என, பல பணிகளை மேற்கொள்ள, தினமும் ஏராளமானோர் வருகின்றனர். போதிய 'கவுன்டர்'கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், தினமும் 30 முதல் 40 பேருக்கு 'டோக்கன்' வழங்கப்படுகிறது. அங்கு ஒரே கவுன்டர் இருப்பதால், நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் அவதிப்படுகின்றனர். பலர், வேலை முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.இந்நிலையில், மக்களின் நலன் கருதி, தற்போது திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை அலுவலகத்தில், புதிய ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டு உள்ளது. இங்கு தற்போதைக்கு மட்டும், புதிய ஆதார் பதிவு தவிர்த்து, கைரேகை பதிவு உள்ளிட்ட மற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.எனவே, இந்த மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஆதார் தொடர்பான சேவைகளை பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை