உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை ஓர பள்ளத்தில் இறங்கிய பேருந்து சிலாவட்டத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு

 சாலை ஓர பள்ளத்தில் இறங்கிய பேருந்து சிலாவட்டத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில் சாலை ஓர பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து, ஓட்டுநரின் சாதுரியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து, நேற்று காலை 5:30 மணிக்கு சென்னை கிளாம்பாக்கத்திற்கு 25க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, மேல்மருவத்துார் கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பி செல்லும் பக்தர்களின் வாகனத்தை, சிலாவட்டம் அருகே சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில், சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தி இருந்தனர். அப்போது, அரசு பேருந்து, நிறுத்தி வைக்கப்பட்ட பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது மோதியது. இதில் அரசு பேருந்து சாலை ஓர பள்ளத்தில் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஓட்டுநரின் சாதுரியத்தால், பயணியர் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி