உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாமல்லை சிற்ப வளாக பணியில் கூடுதல் அலுவலர்கள் நியமனம்

 மாமல்லை சிற்ப வளாக பணியில் கூடுதல் அலுவலர்கள் நியமனம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்ப வளாக கண்காணிப்பிற்காக, கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரத்தில் பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில் ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள், பயணியரை கவர்கின்றன. நம் நாட்டவர், சர்வதேச பயணியர் அதிக அளவில் சுற்றுலா வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், 2019ல் முறைசாரா மாநாடாக இங்கு சந்தித்ததை தொடர்ந்து, இப்பகுதி மேலும் கவனம் பெற்று, பயணியர் குவிகின்றனர். சிற்பங்களை பாதுகாத்து பராமரிக்கும் தொல்லியல் துறையில், ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என, அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், பயணியர் அதிக அளவில் குவிவர். இதனால், சிற்ப வளாகங்களில் கண்காணிக்க மூன்று அலுவலர்கள், நுழைவுச்சீட்டு வழங்க மூன்று 'கிளர்க்'குகள், பிற பணிகளுக்கு ஏழு ஊழியர்கள் என, மொத்தம் 13 பேர் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ