கோகுலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை
செங்கல்பட்டு:நென்மேலி கோகுலம் பொது பள்ளியில், விஜயதசமி திருநாளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளியில், ஆண்டுதோறும் விஜயதசமி நாள் மற்றும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாளில், மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, விஜயதசமி நாள் மற்றும் வித்யாரம்பத்து உகந்த நாளான நேற்று, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன், அரிசியில், 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி எழுதி, மாணவர் சேர்க்கை துவக்கி வைத்தார். இதில், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.