உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள ஆகாய தாமரை கழிவுகள்

சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள ஆகாய தாமரை கழிவுகள்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, அருள் நகரில், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அதில் மழைநீர் சீராக செல்ல இயலாதபடி ஆகாய தாமரை செடிகள் அதிகமாக காணப்பட்டன. அப்பகுதியினர் அளித்த புகாரின்படி, சமீபத்தில் நகராட்சி சார்பில், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, ஆகாயத் தாமரைகளை அகற்றி, அதை சாலையோரம் குவித்து வைத்துள்ளனர்.அதை அகற்றாததால், சாலையில் செல்வோருக்கு இடையூறாக உள்ளது.இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய, ஆகாய தாமரைகளை அகற்றி, அதை சாலையோரம் போட்டு உள்ளனர். அவை நீண்ட நாட்களாக அகற்றாததால், துர்நாற்றத்துடன் கொசு தொல்லை, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சாலையில் தேங்கியுள்ள, ஆகாய தாமரை கழிவுகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ