வண்டலுாரில் 10 குட்டி ஈன்ற அனகோண்டா
தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மஞ்சள் அனகோண்டா பாம்பு, 10 குட்டிகளை ஈன்றுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள இந்த குட்டிகள், விரைவில் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 1,429 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. ஐந்து ஆண், இரண்டு பெண் என, ஏழு மஞ்சள் அனகோண்டா பாம்புகளும் அடங்கும்.இதில், பெண் பாம்பு ஒன்று, இரண்டு நாட்களுக்கு முன், 10 குட்டிகளை ஈன்றது. குட்டிகளும், தாய் பாம்பும் தனி கூண்டில் மருத்துவ கண்காணிப்பில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.அதேபோல, 17 நெருப்புக் கோழிகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், பெண் நெருப்புக் கோழி ஒன்று, இரண்டு நாட்களுக்கு முன், மூன்று குஞ்சுகளை பொரித்துள்ளது. தாயும், நெருப்புக்கோழி குஞ்சுகளும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. விரைவில் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.