பழங்கால ரேடியோ, மொபைல் பெரும்பாக்கத்தில் கண்காட்சி
பெரும்பாக்கம்,:தமிழ்நாடு எலக்ட்ரானிஸ் டெக்னீசிஷியன் அசோஷியேஷனுடன், பெரும்பாக்கம் ஊராட்சி இணைந்து, இரண்டு நாள் பழமையான எலக்ட்ரானிக் பொருட்களின் கண்காட்சியை, வரும், 21ம் தேதி பெரும்பாக்கத்தில் நடத்துகிறது.இதில், 1940ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு, தற்போது வரையுள்ள 1,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இடம் பெறுகின்றன.குறிப்பாக ஆரம்ப காலக்கட்டங்களில் இருந்த, 'டிவி, கேமரா, ரேடியோ, கணினி, மொபைல் போன், கிராமபோன்' உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.கண்காட்சிக்கு வரும் மாணவர்களுக்கு, எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கடும்.மேலும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, எலக்ட்ரானிக் பொருட்கள் பயிற்சி, ஒரு நாள் இலவசமாக வழங்கப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.