120 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ., வளாகத்தில், மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, நடந்தது.இதில், கல்லுாரி தாளாளர் செந்தில்குமார் பங்கேற்று, தனியார் நிறுவனங்கள் நேர்முக தேர்வு நடத்தி, தேர்ந்தெடுத்த 120 மாணவர்களுக்கு, பணி நியமன ஆணையை வழங்கி பேசியதாவது:வாழ்கையில் மென்மேலும் உயர வேண்டுமானால் பெற்றோர்களின் சொற்படி நடக்க வேண்டும். மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்திற்கு பாதுகாப்பாக சென்றுவர வேண்டும். தீய பழக்கங்களில் இருந்து, பாதுகாத்துக் கொள்ளும் மன பக்குவத்தை பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, கம்ப்யூட்டர் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.