உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேர்வு செய்தும் பட்டா தராமல் இழுத்தடிப்பு அருங்குன்றம் பயனாளிகள் தவிப்பு

தேர்வு செய்தும் பட்டா தராமல் இழுத்தடிப்பு அருங்குன்றம் பயனாளிகள் தவிப்பு

திருப்போரூர்:அருங்குன்றம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுாார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.இப்பகுதிகளில், கிராம நத்தம் போன்ற அரசு நிலங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசிக்கின்றனர்.இவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, குறைத்தீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களிலும், தனிப்பட்ட முறையிலும் துறை சார்ந்து மனு அளித்து வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி, இலவச பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனால், விழா முன்னதாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.கடந்த மார்ச் 11ம் தேதி, விழா நாளில் குறிப்பிட்டோருக்கு முதல்வரால் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மற்றவர்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.அந்த வகையில், திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய அருங்குன்றம் கிராமத்தில், 38 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.இதில், 9 பேருக்கு மட்டும் முதல்வர் விழாவில் பட்டா வழங்கப்பட்டது. மற்றவர்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பயனாளிகள் அலுவலகத்தில் பட்டா கேட்ட போது, இணையத்தில் பதிவேற்றம் செய்த பிறகு பட்டா அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்து காலதாமதம் ஏற்படுத்தி வருவதால் பட்டா கிடைக்குமா அல்லது ஏதாவது காரணம் சொல்லி கிடைக்காமல் போகுமா என, அப்பகுதி மக்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ