உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆசிய அளவிலான ஒலிம்பிக் போட்டி காஞ்சி வீரர் -- வீராங்கனை தேர்வு

ஆசிய அளவிலான ஒலிம்பிக் போட்டி காஞ்சி வீரர் -- வீராங்கனை தேர்வு

காஞ்சிபுரம், புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில், கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை, ஆசிய அளவிலான யோகாசன போட்டி நடந்தது.இதில், மங்கோலியா, ஜப்பான், பூடான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த, 1,364 பேர் பங்கேற்றனர்.இதில், இந்தியா அணியில் விளையாடிய காஞ்சிபுரம் மாமல்லன் பள்ளி மாணவி சி.ஓவியா, ஜூனியர் பிரிவில் ஒரு தங்கம், இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம் என, இரு தங்கப்பதக்கங்களை வென்றார்.காஞ்சிபுரம் கா.மு.சுப்பராயமுதலியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.தேவேஷ், ஜூனியர் பிரிவில் ஒரு தங்கம், இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம் என, இரு தங்கப்பதக்கங்களை வென்றார்.இவர்கள் இருவரும், ஜப்பானில் 2026ல் நடைபெறும் ஆசிய அளவிலான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என, யோகா பயிற்சியாளர் யுவராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ