உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம்: இன்று முதல் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம்: இன்று முதல் முகாம்

சென்னை, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள் அளவிடும் முகாம், இன்று முதல் நடக்கிறது.முகாமில் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், கை கால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று ஆதார் அட்டை வருமான சான்றுகளுடன் முகாமில் நேரடியாக பங்கேற்கலாம்.முகாம், தினமும் காலை 10:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறுகிறது.மேலும், விபரங்களுக்கு வடசென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலகம் 044 2999 3612 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.முகாம் நடைபெறும் விபரம்:மண்டலம் நாள் இடம்ராயபுரம் இன்று பி.ஆர்.சி.,அரட்டூன் சாலை, ராயபுரம்அம்பத்துார் நாளை ஸ்ரீ மகா கணேச வித்யாசால மிடில் பள்ளி, நார்த் பூங்கா தெரு, அம்பத்துார்பெரம்பூர் 20ம் தேதி சென்னை நடுநிலை பள்ளி, மாதவரம் நெடுஞ்சாலை பெரம்பூர்அண்ணா நகர் 21 சென்னை நடுநிலைப்பள்ளி எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம்திருவொற்றியூர் 22 பாப்பிலி ராஜா உயர்நிலைப்பள்ளி, புழல்கொளத்துார் 24 சென்னை மழலையர் பள்ளி பல்லவன் சாலை, திரு.வி.க., நகர்தண்டையார்பேட்டை 25 சி.பி.எஸ்., மீனம்பாள் நகர், கொருக்குபேட்டை ரயில் நிலையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை