பா.ஜ., உட்கட்சி பூசல்; நிர்வாகி மீது தாக்குதல்
சேலையூர்: மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 28; பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, பெருங்களத்துாரில் உள்ள கட்சி அலுவலகத்தில், உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த யஷ்வந்த், செந்தில், அரவிந்த் ஆகியோர், அவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், சுபாஷ் என்பவர் மாவட்ட தலைவராக ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கணேஷிடம் கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்னையில், மேற்கூறிய நபர்கள் தாக்கியிருக்கலாம் எனவும் தெரிந்தது.