ரேஷன் கடையில் திருட்டு முயற்சி
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அருகே ரேஷன் கடையில் திருட்டு முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சிங்கபெருமாள் கோவில், பெரிய விஞ்சியம்பாக்கத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 560 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இந்த ரேஷன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் எடைத்தட்டு பொருட்கள் ஏதும் இல்லாததால், ஏமாற்றமடைந்துள்ளனர். உப்பு மூட்டைகள் மட்டுமே இருந்துள்ளன. அருகில் இருந்த மற்றொரு அறையின் பூட்டை உடைக்கும் போது, மக்கள் வருவதைக் கண்டு தப்பி சென்றுள்ளனர். இந்த திருட்டு முயற்சி குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.