சிக்னல் சந்திப்பு சாலை மோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலை - மாநகராட்சி மண்டல அலுவலக சிக்னல் சந்திப்பை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள், நியூ காலனி, மண்டல அலுவலகம், சி.எல்.சி., சாலை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, சிக்னலில் இடது புறம் திரும்பி செல்கின்றன.சிக்னலில் இருந்து இடது புறம் திரும்பும் சாலை, சில மீட்டர் துாரத்திற்கு சாலையா, இல்லை மரண பள்ளங்களா எனும் அளவிற்கு படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் அங்கு, ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, சிக்னலில் மோசமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.