மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில்பண்டிகை துவங்கியது
08-Apr-2025
திருப்போரூர்:திருப்போரூர் கிரிவலப் பாதையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருப்பணி துவக்க, பாலாலய பூஜை நடந்தது.திருப்போரூர் பேரூராட்சி, செங்கல்பட்டு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிரிவல சாலையில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.பழமையான வேப்பமரத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் சிதிலமடைந்த கூரை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் முடிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து, நேற்று காலை திருப்பணி துவங்குவதற்கான பாலாலய பூஜை நடந்தது. இதையொட்டி கணபதி, நவக்கிரகம், மகாலட்சுமி ஹோமம் என, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள் பிரார்த்தனையாக திருப்பணி துவக்குவதற்காக நன்கொடை வழங்கினர்.
08-Apr-2025