உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.43 லட்சம் மோசடி

 வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.43 லட்சம் மோசடி

திரு.வி.க.நகர்: வங்கியில், 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத்தவதாக கூறி, 43.10 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்தவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், ஒற்றைவாடை தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி புருஷோத்தம்மன், 40. இவர், தி.நகரில் 'பிரதீப் குயின்ஸ் ஹாலிடே ரிசார்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொழில் வளர்ச்சிக்காக பணம் தேவைப்பட்டதால், தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆனந்த்ராஜ், 42, என்பவரை அணுகியுள்ளார். அவர், 3 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு கமிஷனாக, 43.10 லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய முரளி புருஷோத்தம்மன், 43.10 லட்சம் ரூபாயை ஆனந்த்ராஜ் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், சொன்னபடி வங்கி கடன் பெற்றுத்தரவில்லை. அதனால், கொடுத்த கமிஷன் பணத்தை முரளி புருஷோத்தம்மன் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், தர முடியாது எனக்கூறி ஆனந்த்ராஜ் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் முரளி புருஷோத்தம்மன் புகார் அளித்தார். அதன்படி, திரு.வி.க., நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ