உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் அருகே லாரியில் பேட்டரி திருடியோர் கைது

பாலுார் அருகே லாரியில் பேட்டரி திருடியோர் கைது

சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு அடுத்த.குருவன்மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 40, என்பவர், தன் இரண்டு லாரிகளை, கொங்கணஞ்சேரி பகுதியில் நிறுத்திவிட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது, இரண்டு லாரிகளிலும் பேட்டரிகள் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து ஜெயச்சந்திரன், பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், பேட்டரி திருட்டில் ஈடுபட்ட ஆத்துார் வடபாதி பகுதியைச் சேர்ந்த சுனில்குமார், 30, அவரது நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின், அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை