உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இருவேளை வீதியுலா எதிர்பார்ப்பு

பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இருவேளை வீதியுலா எதிர்பார்ப்பு

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் 63வதாகவும், நிலம் சார்ந்த தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.இக்கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சித்திரை பிரம்மோற்சவம், பங்குனி உத்திர உற்சவம் என, தலா 10 நாட்கள் நடந்தன.இங்கு அவதரித்த பூதத்தாழ்வாருக்கு, 10 நாட்கள் அவதார உற்சவம் நடக்கவுள்ளது. கடந்த 1980ம் ஆண்டிற்கு முன், பூதத்தாழ்வார், தினசரி காலை, மாலை என, இரண்டு வேளையும் வீதியுலா சென்றுள்ளார்.அதன்பின், ராஜகோபுரம் புதுப்பித்தல் திருப்பணிகள், 18 ஆண்டுகள் நீடித்ததால், கோவில் உற்சவங்களும் தடைபட்டன. 1998ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின், மீண்டும் உற்சவங்கள் நடத்தப்பட்டன. நாளடைவில் பூதத்தாழ்வார் அவதார உற்சவ வீதியுலா, தினசரி காலை மட்டுமே நடந்தது.தற்போது, பூதத்தாழ்வார் உற்சவ வீதியுலாவை, தினசரி காலை, மாலை நடத்தவும், நாலாயிர திவ்ய பிரபந்த சேவையை முழுமையாக பாடவும், பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, செயல் அலுவலர் சக்திவேல் கூறியதாவது:பூதத்தாழ்வார் அவதார உற்சவ வீதியுலா, பல ஆண்டுகளாக தினசரி ஒருவேளை மட்டுமே நடக்கிறது. மாலையிலும் வீதியுலா செல்வதற்கு, பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோருடன் ஆலோசித்தே முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை