உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் கால்வாய்க்கு பூமி பூஜை

மழைநீர் கால்வாய்க்கு பூமி பூஜை

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியம், திருமுக்காடு ஊராட்சிக்குட்பட்ட உத்தமநல்லுாரில், மன்மதன் கோவில் தெரு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மழைக் காலங்களில் சேகரமாகும் மழைநீர், தெரு ஓரம் வழிந்தோடி, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வந்தது. இதனால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பலமுறை மனு அளித்து வந்தனர்.இந்நிலையில், 15 வது மானிய குழு திட்டத்தின் வாயிலாக, 2023 - 24ம் ஆண்டில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க, 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கால்வாய் அமைப்பதற்காக, நேற்று பூமி பூஜை நடந்தது. இதில், ஊராட்சி தலைவர் பெருமாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை