மேலும் செய்திகள்
கோமாதா, வேல் பூஜை
27-Oct-2025
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் நேற்று, பா.ஜ., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவையில், கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில், கூடுவாஞ்சேரியில் நேற்று மாலை, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மகளிர் அணி தலைவி ராஜி உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ., தலைவர் ரகுராமன், மாநில மகளிர் அணி துணை தலைவர் காயத்திரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
27-Oct-2025