ரத்ததான முகாம்
மாமல்லபுரம்: தமிழ்நாடு குருதி கொடையாளர்கள் சங்க, மாமல்லபுரம் பிரிவு மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை இணைந்து, மாமல்லபுரத்தில் நேற்று ரத்ததான முகாம் நடத்தியது. சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்த முகாமில், ரத்த வங்கி குழுவினர், ரத்த தானம் வழங்க விரும்பிய ஆர்வலர்களை பரிசோதித்து, மொத்தம் 47 பேரிடம் தலா ஒரு யூனிட் ரத்தம் பெற்று, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.