உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவரின் உடல் மீட்பு

கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவரின் உடல் மீட்பு

திருப்போரூர்:கூடுவாஞ்சேரி அருகே, கல் குவாரி குட்டையில் மூழ்கிய கல்லுாரி மாணவர் உடல் மீட்கப்பட்டது.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குரு சத்யசாய், 18. இவர், காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் பல்கலை விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார்.கடந்த 4ம் தேதி, கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் குளிக்க, சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.அங்கு குளித்த போது, ஆழமான பகுதிக்குச் சென்ற குரு சத்யசாய், நீரில் மூழ்கினார்.இதைப் பார்த்து அலறிய சக மாணவர்கள், உடனே காயார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார், மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.தீயணைப்பு வீரர்கள், கல் குவாரி குட்டையில் மூழ்கிய மாணவரின் உடலை தேடினர். தொடர்ந்து, சென்னையில் இருந்து, மெரினா கடற்கரை நீச்சல் வீரர்களை வரவழைத்து தேடி வந்தனர். இந்நிலையில், மாணவர் மூழ்கி மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் மாலை, அவரது உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை