உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அழுகிய நிலையில் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமம், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் சேகர், 55. இவரது மனைவி கனகவள்ளி. தம்பதியின் மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.கனகவள்ளி, கடந்த 12ம் தேதி மகளைப் பார்க்க சென்றுள்ளார்.சேகர் மட்டும், வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில், வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, வீட்டின் உள்ளே பார்த்த போது, சேகர் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சேகர் உடல்நலம் பாதிப்பால் இறந்தாரா அல்லது யாராவது அடித்து இறந்தாரா என, பல கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை