மேலும் செய்திகள்
பைக் மோதி காஞ்சி நபர் பலி
20-Jan-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், புத்தக திருவிழா வரும் 20 ம் தேதி துவங்கி, 28ம் தேதிவரை நடக்கிறது.தமிழகத்தில் உள்ள, அனைத்து மாவட்டங்களிலும், புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறாவது ஆண்டாக, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து புத்த கண்காட்சியை நடத்தி வருகிறது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள, அலிசன் காசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், புத்தக திருவிழா, வரும் 20ம் தேதி துவங்கி, 28ம் தேதிவரை நடக்கிறது. ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
20-Jan-2025