உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆன்லைன் செயலியில் கடன் பெற்றவர் தற்கொலை

ஆன்லைன் செயலியில் கடன் பெற்றவர் தற்கொலை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 27. இவருக்கு, சுபாஷினி, 24, என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 6 மாத பெண் குழந்தை உள்ளது.தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த யுவராஜ், கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலையை விட்டு விட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார்.குடும்ப செலவுகளுக்காக, ஆன்லைன் செயலி வாயிகாக கடன் பெற்றுள்ளார், அதனால், யுவராஜ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, படுக்கை அறைக்கு சென்ற யுவராஜ், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், யுவராஜ் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ