உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம், கேளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல்.இவரது மகன் சாய் தர்ஷன், 8; அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். வீட்டில் இருந்த சிறுவன், நேற்று முன்தினம் இரவு காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும், சிறுவன் கிடைக்கவில்லை. பின், கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில் நேற்று, அப்பகுதியில் உள்ள கேளியம்மன் கோவில் குளத்தில், சிறுவன் இறந்து மிதந்து கிடந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தோர், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை