உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் விபத்தில் சிறுவன் பலி

பைக் விபத்தில் சிறுவன் பலி

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே சரக்கு வாகனம் மோதியதில் 'பைக்' ஓட்டிச்சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் கோபி, 16, பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கோபி சிங்கபெருமாள் கோவிலில் டியூஷன் சென்டருக்கு 'ஹீரோ ஸ்பெளண்டர்' பைக்கில் சென்றார். அப்போது அஞ்சூர் கூட்டு சாலை அருகில் சென்ற போது எதிரே வந்த 'எய்ச்சர்' சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோபியை அங்கிருந்தோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கோபி உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை