உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர்களுக்கு தீ வைத்த சிறுவர்கள்? 9 வாகனங்கள் நாசம்; இது 3வது சம்பவம்

டூ - வீலர்களுக்கு தீ வைத்த சிறுவர்கள்? 9 வாகனங்கள் நாசம்; இது 3வது சம்பவம்

அயனாவரம், அயனாவரத்தில், மூன்றாவது முறையாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி சிறுவர்கள் தீ வைத்து எரித்த சம்பவம், பீதியை ஏற்படுத்தியுள்ளது.அயனாவரம், சோலையம்மன் கோவில் குறுக்கு தெருவில், நேற்று அதிகாலை 2:50 மணியளவில், சாலையோரத்தில் குடியிருப்பின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது இருசக்கர வாகனங்கள், அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.இதையறிந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இதில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து, அயனாவரம் போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், சிலர் வாட்டர் கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தது போல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகி இருப்பதாக, போலீஸ் வட்டராங்களில் கூறப்படுகிறது.'போகி' பண்டிக்கைக்காக சிறுவர்கள் விளையாடும்போது விபத்து ஏற்பட்டதா அல்லது எதேனும் முன்பகையாக என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கு முன், அயனாவரத்தில், ஒரு முறை மூன்று இருசக்கர வாகனங்களும், மற்றொரு முறை ஆட்டோ எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தொடர் சம்பவங்களால் அயனாவரம் குடியிருப்புவாசிகள் வாகனங்களை வீட்டின் வெளியில் நிறுத்துவதற்கு அச்சப்படுகின்றனர். போலீசார் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ