உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டுபுகார் பெட்டி; இ.சி.ஆரில் உலவும் கால்நடைகள் கூவத்துார் பகுதியில் விபத்து அபாயம்

செங்கல்பட்டுபுகார் பெட்டி; இ.சி.ஆரில் உலவும் கால்நடைகள் கூவத்துார் பகுதியில் விபத்து அபாயம்

இ.சி.ஆரில் உலவும் கால்நடைகள் கூவத்துார் பகுதியில் விபத்து அபாயம்

கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயமே பிரதான தொழில். கூடுதலாக, கால்நடைகள் வளர்ப்பிலும், அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பெரும்பாலான கால்நடைகளின் உரிமையாளர்கள், தங்களது கால்நடைகளை முறையாக பராமரிப்பதில்லை. அவற்றை, மேய்ச்சலுக்காக பராமரிப்பாளர் இல்லாமல் கட்டவிழ்த்து விடுகின்ரனர்.அதனால், அவை கிழக்கு கடற்கரை சாலையில், கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. எதிர்பாராத நேரங்களில் சாலையில் குறுக்கிடும் மாடுகளால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து, பராமரிப்பின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலைகளில் ஒப்படைப்பதுடன், அவற்றின் உரிமையாளர்கள் மீது அபராதமும் விதிக்க வேண்டும்.- கி.ஆனந்தன், செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ