காளை மாடுகள் மாயம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 52. இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுவதற்கு பயன்படும் இரண்டு காளை மாடுகள் உள்ளன.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில், காளை மாடுகளை கட்டிவிட்டு, இரவு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை வழக்கம்போல நிலத்திற்கு சென்று கொட்டகையில் பார்த்தபோது, மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்களிடம் விசாரித்தார்.எங்கு தேடியும் மாடுகள் கிடைக்காததால், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.